* சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டு கொழுக்கட்டை தானம் அளித்தால் செல்வம் பெருகும். * விநாயகருக்கு கணபதி என்றும் பெயருண்டு. ‘க’ என்ற எழுத்து ஞானம், ‘ண’ என்பது மோட்சம், ‘பதி’ என்பது தலைவன் என்பதையும் குறிக்கிறது. * தோப்புக்கரணமிட்டு விநாயகரை முதலில் வழிபட்ட முனிவர் அகத்தியர். * கேது புத்தி, கேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபடுவது நன்மை தரும். * ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது மூலாதாரம். * புகழ்மிக்க அஷ்ட விநாயகர் கோயில்கள் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தைச் சுற்றியுள்ளன. * அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் விநாயகர் அருளால் பிறவிப்பிணி தீரும். * விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் செய்த விநாயகரை வழிபடுவது சிறப்பு. * சதுர்த்தி விரதமிருந்த பலனால் சிவபெருமானே பார்வதிக்கு கணவராக கிடைத்தார். * பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 – காலை 6:00 மணிக்குள் விநாயகரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். * புல்லாங்குழல் இசைக்கும் விநாயகர் ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கிறார். * தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில் சங்கு சக்கர விநாயகர் காட்சி தருகிறார். * விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல்பெண் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.