விநாயகர் சதுர்த்தியன்று எப்படி பூஜை செய்வது என்பதை பார்ப்போமா... வாசலில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டுங்கள். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல் இருப்பது கூடாது. அவல், பொரி, கடலை, மோதகம், சுண்டல் படைத்து, ‘சீதக்களப’ எனத் தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரிய சித்தி மாலை பாடல்களைப் பாடுங்கள். தீபம், சாம்பிராணி ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மூன்றாம் நாளன்று சிலையை நீரில் கரைக்கும் வரை தினமும் காலை, மாலையில் பூஜை செய்யுங்கள்.