ஒரு பெரியவர் தினமும் கடற்கரையில் தியானம் செய்வார். அப்போது அவரது தோள் மீது பறவைகள் அமர்ந்து விளையாடும். இதைக் கண்ட சிறுவன் ஒருவன்,‘‘உங்களுடன் பறவைகள் விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு ஒரு பறவையை பிடித்துத் தாருங்கள்’’ எனக் கெஞ்சினான். அவரும்,‘‘ ஒரு பறவைதானே பிடித்து தருகிறேன்’’ என்றார். மறுநாள் பறவையை எப்படி பிடிப்பது என யோசித்தபடி தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவரின் தலைக்கு மேலே அதிக பறவைகள் பறந்தாலும் ஒன்று கூட அவர் அருகே வரவில்லை. காரணம் ஏன் எனச் சிந்தித்தார். மனதில் எழும் தீய எண்ணமே இதற்கு காரணம்... விளையாட்டாக கூட எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க கூடாது என்ற உண்மை அவருக்கு புரிந்தது.