ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 08:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்திரசயனர் சன்னதியில் பவித்ர உற்சவம் நேற்று முதல் துவங்கியது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஏகாசி துவங்கி ஏழு நாட்கள் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3:00 மணிக்கு வடபத்திர சயனர் சன்னதி மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் வேதபிரான் திருமாளிகையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவித்ர மாலைகள் சாற்றப்பட்டு, திருவாய்மொழி, சேவாகாலம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து தினமும் மதியம் 3:00 மணிக்குமேல் பவித்ரஉற்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான செப்டம்பர் 12 அன்று கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.