15 வருடங்களுக்குப் பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 08:09
மானாமதுரை: மானாமதுரை அருகே 15 வருடங்களுக்கு பிறகு விமரிசையாக நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புரவிகளை சுமந்து கொண்டு சென்றனர்.
மானாமதுரை அருகே உள்ள நத்தபுரக்கி, என்.வலசை, கண்மாய்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழை வேண்டியும், வேண்டுதல் நிறைவேறவும் ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு ஊர் கூடி புரவி எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம், மேற்கண்ட கிராமங்களின் காவல் தெய்வமான காட்டூரணி அய்யனாருக்கு 15 வருடங்களுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று மானாமதுரைக்கு ஊர்வலமாக வந்த கிராம மக்கள் வேளார் தெருவில் இருந்து 43 புரவிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வேண்டுதல் பொம்மைகளை சுமந்தபடி ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக கிராமத்திற்கு சென்றனர். முன்னதாக புரவிகளுக்கு வேட்டி, துணடுகள் அணிவிக்கப்ப்டடு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இன்று காலை அய்யனார் கோயிலில் புரவிகள் வைக்கப்ப்டடு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.இந்த விழாவிற்காக வெளியூர்களில் வசித்து வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.