வானமுட்டி பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோழி குத்தி வானமுட்டி பெருமாள் கோவிலில் யாக சாலை மூன்றாம் கால பூஜையில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெருமாள் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில், சங்கு சக்கர கதா அபய கஸ்தத்துடன், பிப்புல மகரிஷிக்கு காட்சி தந்த வண்ணம் நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார். இங்கு வந்து பெருமாளை சேமிப்பவர்களுக்கு பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம், சர்வ வியாதி நிவர்த்தி செய்து வைக்கிறார். கோடி பாவங்களையும் விமோசனமாக்கும் கோடிகத்தி பாவ விமோசனபுரம் என்ற கோழிகுத்தி கிராமத்தில் பைகானச பகவத் சாஸ்திர முறையில் பூஜித்து வருபவரான வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை நடைபெற்ற மூன்றாம் கால யாகசாலை பூஜையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை கோவில் நிர்வாகத்தினர் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்றனர். உடன் தொழிலதிபர் விஜயகுமார், சென்னை மகாலட்சுமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.