பதிவு செய்த நாள்
10
செப்
2022
08:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடியில், குலதெய்வ நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி, கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை ஆகியவையும், முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், நேற்று காலை 10.15 மணிக்கு மணிகண்டன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தலைமையில், கும்பநீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் வாணியக்குடி, மேலச்செங்குடி, கடலூர் உட்பட, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில், கோவில் நிர்வாக குழு தலைவர் போஸ், செயலாளர் கார்த்திகை ராஜா, பொருளாளர்கள், முத்துக்குமார், கலைச்செல்வன், சட்ட ஆலோசகர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.