பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டி வண்டிகருப்பண சுவாமி கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. தங்கம்மாபட்டி, பொட்டிநாயக்கன்பட்டி, வால்பட்டி, புதூர், கருஞ்சின்னானுர், முடக்குபட்டி, செம்பன்பழனியூர் கிராமத்தினரால் வழங்கபட்ட குதிரை சிலைகள் தங்கம்மாபட்டியிலில் இருந்து அதிகாலை 2 மணிக்கு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேக, ஆராதனை நடந்தது. 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.பி., சீனிவாசன், பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் அழகர்சாமி, மாவட்ட கவுன்சிலர் திரவியராஜ், பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி, செயல்அலுவலர் சரவணக்குமார், அ.தி. மு.க., தொகுதி இணை செயலாளர் ராஜமோகன், நகர செயலாளர்கள் கே.வி.சி. மணி, பாலசுப்பிரமணி, விவசாய அணி இணை செயலாளர் சின்னாத்தேவர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.