பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
பவானி: பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோவிலில் கோடி அர்ச்சனை மண்டபத்தில், 20வது கோடி அர்ச்சனை விழா நேற்று முன்தினம் துவங்கியது.தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமை வகித்தார். கோவை, பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் கோபி செங்கோட்டையன், பவானி நாராயணன், கோவை, பண்ணாரி அம்மன் சுகர்ஸ் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.கோடி அர்ச்சனை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கோவில் உதவி ஆணையர் நடராஜன், யூனியன் சேர்மன் தங்கவேலு, நகராட்சி சேர்மன் கருப்பணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.வரும், 24ம் தேதி வரை நடக்கும் விழாவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மஹா மந்திர அர்ச்சனை, பிற்பகல், 12.30 முதல் 1 மணி வரை ஆரதி பூஜை, மாலை 2 முதல் இரவு 8 மணி வரை மஹா மந்திர அர்ச்சனை நடக்கிறது.பக்தர்களே சன்னிதானத்தில் அமர்ந்து ஒவ்வொருவரும், 1008 முறை சொல்லி அட்சதை இட்டு அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பொது மக்கள் பங்கேற்கின்றனர்.