வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா: 80 ஆடுகள் பலியிட்டு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2022 05:09
செந்துறை, நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவையொட்டி செப்.19 மொட்ட மலைப்பகுதியில் உள்ள வேட்டைக்காரன், குட்டுக்கருப்ப சுவாமி சன்னதியில் உள்ள வேள்களுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 5 மணிக்கு கிடாய் வெட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இலுப்பபட்டி, மொட்டமலைப்பட்டி, அரவங்குறிச்சி, விளாம்பட்டி, துத்திபட்டி, வேலூர், கணவாய்பட்டி உள்ளிட்ட கிராம மக்களால் 80க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ அன்னதானம் நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.