பதிவு செய்த நாள்
24
செப்
2022
05:09
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், புரட்டாசி திருவிழா நடந்தது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திரு மஞ்சனமும், 6:30 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை 6.:45 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, கரி வரதராஜ பெருமாள் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. குன்னத்தூர், பெருமாள் கோவிலில், காலை 8:30 மணிக்கு, பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் காலையில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொகலூர், பொங்கலூர், கஞ்சப்பள்ளி, குன்னத்தூர், ஓரைக்கால் பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.