கடலாடி: கடலாடியில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு தசரா விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. குலசை ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் கும்பம் எடுத்து வந்து கடலாடி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து கும்ப வீதி உலா வந்தது. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்திக்கடன் விரதத்தை துவக்கினர். மதியம், இரவில் அன்னதானம் நடந்தது.
நேற்று இரவு 8:00 மணி அளவில் மாகாளி பூஜை, பஜனை, அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கு முத்தாரம்மன் கோயிலில் இருந்து பல்வேறு வகையான வேடமணிந்து வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முனியசாமி, உமையன் சூரி, தங்கதுரை, மற்றும் கடலாடி, புரசங்குளம் காமாட்சியம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.