முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே செய்யாமங்களம் கிராமத்தில் பூங்குழலி அம்மன் கோயில் பொங்கல் விழா, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது .இதனை முன்னிட்டு அபிராமம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அபிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் செய்யாமங்களம் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துவந்தனர். கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக குதிரைகள் தூக்கி வந்து அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர்.பூங்குழலி அம்மன் கோயிலில் கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பின்பு மூலவரான பூங்குழலி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. விழாவில் செய்யாமங்களம் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.