அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கடமலைபுத்துாரில் 50 ஆண்டுகளான கிராம தேவதை கனக முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. யாகசாலை பூஜையை தொடர்ந்து, கோவில் கோபுரத்திற்கு குண்டங்கள் எடுத்து செல்லப் பட்டன.பின், சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, மூலவர் விமானம் மற்றும் கோபுர விமானத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேகத்தில் அருள்பாலித்த அம்மனை, பக்தர்கள் தரிசித்தனர்.