தசரா திருவிழா திருப்புவனத்தில் வலம் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2022 10:10
திருப்புவனம்: குலசேகரப்பட்டினத்தில் வரும் 5ம் தேதி தசரா திருவிழா நடைபெற உள்ளதையடுத்து திருப்புவனம் அருகே வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நோயாளி, குறத்தி, பிச்சைக்காரன், உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வழிபட்டனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் வேடமிட்டு வலம் வந்தவர்களை வணங்கி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் கூறுகையில்: குலசேகரப்பட்டினம் முத்தாலம்மனை வணங்கி வேண்டினால் நினைத்தது நடக்கும், உடல்நலம், விபத்து உள்ளிட்டவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெற்றால் நோயாளி வேடமிட்டும், நொடித்து போனவர்கள் சரியாகினால் பிச்சைக்காரன் வேடமிட்டும் நேர்த்தி கடன் செலுத்துவார்கள், கொரானோ பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால் இந்தாண்டு குறைந்த அளவு பக்தர்களே விரதமிருந்து வேடமிட்டுள்ளனர், என்றார். வேடமிடும் பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து காலில் செருப்பு கூட அணியாமல் வலம் வருகின்றனர். தசரா அன்று முத்தாலம்மனை வணங்கி விரதத்தை நிறைவு செய்கின்றனர்.