Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ஐப்பசி மாத பலன் கன்னி : ஐப்பசி மாத பலன் கன்னி : ஐப்பசி மாத பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை)
சிம்மம் : ஐப்பசி மாத பலன்
எழுத்தின் அளவு:
சிம்மம் : ஐப்பசி மாத பலன்

பதிவு செய்த நாள்

17 அக்
2022
08:10

மகம்:
எல்லோரையும் வசீகரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் நலம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் அகலும். அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய பணம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.
சந்திராஷ்டமம்: நவ. 4
அதிர்ஷ்ட நாள்: நவ. 13, 14

பூரம்:
பக்குவமான அணுகுமுறையை கையாளும் உங்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். புதன் சஞ்சாரத்தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னை தலை துாக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். குழந்தைகள் விசயத்தில்  மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். கலைத்துறையினருக்கு பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம். அரசியல்வாதிகள் மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 5
அதிர்ஷ்ட நாள்: அக். 18, நவ. 14, 15

உத்திரம் - 1:
வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. சூர்யன் சஞ்சாரம் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலை யில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். பணியாளர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரவு தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கலைத்துறையினர் மிக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நல்ல பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம்: ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 6
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 20, நவ. 15, 16

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பங்குனி மாதம் நன்மையான மாதம். பொருளாதார நிலை உயரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செயல்திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்; பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்:  நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar