உத்திரம் - 2, 3, 4: போராடி எதிலும் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரத் தால் எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் நலம் உண்டாகும். பணவரவு எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. பணியாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சிலர் வதந்திகள் மூலம் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள் ஆனால் நீங்கள் சுதாரிப்பாக இருப்பது நலம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பிறருடன் பழகும் போது கவனமாக இருக்கவும். பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும். பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும். சந்திராஷ்டமம்: நவ. 6 அதிர்ஷ்ட நாள்: அக்.19,20, நவ.15,16
அஸ்தம்: எறும்பு போல் அலுக்காமல் உழைக்கும் உங்களுக்கு இந்த மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். வீடு மனை சம்பந்தமான விஷயங்களில் நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய் கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்.கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திப்பதை திட்டமிட்டு செயலாற்றுங்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பரிகாரம்: நவ.க்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்னை குறையும். சந்திராஷ்டமம்: நவ. 7 அதிர்ஷ்ட நாள்: அக்.20,21, நவ.16, 17
சித்திரை - 1, 2: துடிப்புடன் வேகமாக செயலாற்றும் உங்களுக்கு இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதுாரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார் கள். பணியாளர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல் பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதுார தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். கலைத்துறையினர் சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் நீங்கும். இரவு பகல் பாராமல் உழைத்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். பரிகாரம்: கருடாழ்வாரை வணங்க எல்லா நன்மைக ளும் உண்டாகும். குறைகள் நீங்கும். சந்திராஷ்டமம்: நவ.8 அதிர்ஷ்ட நாள்: அக்.21, 22
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »