பதிவு செய்த நாள்
31
அக்
2022
01:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த கந்த சஷ்டி விழாவில் காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜை, சத்ருசம்ஹார சுப்பிரமணிய திரிசதி நாமாவளி, ஹோமம், மூல மந்திரம், காயத்ரி மந்திரம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:30மணிக்கு சிவானந்தவள்ளி சன்னதியில் சூரசம்கார நிகழ்ச்சிக்காக அம்பாளிடம் இருந்து சக்திவேல் பெறப்பட்டு சுப்பிரமணியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1008 சஹஸ்ர நாமார்ச்சனை மகாதீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவமூர்த்தி கோவிலை வலம் வந்து சூரபத்மனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.