கொங்கணகிரி கந்தப் பெருமான் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2022 02:10
அனுப்பர்பாளையம்: திருப்பூர், காலேஜ் ரோட்டில் கொங்கணகிரி அருள்மிகு கந்தப் பெருமான், திருக்கோவில் உள்ளது. கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் முருகப்பெருமானுக்கு விசேஷ யாகங்களும், விசேஷ அபிஷேகங்களும், நடைபெற்று வருகிறது. நேற்று 30 ம் தேதி மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில், இன்று 31ம் தேதி திருக்கல்யாணம் வைபோவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, காலை 8:30 மணிக்கு முருக பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. 10:15 மணிக்கு திருக்கல்யாண வைபோவம் தொடங்கி, மதியம் 12 : 15 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்று கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த பெருமான் அருள் பெற்றனர். தொடர்ந்து, மகா தீபாரதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் மற்றும் மக்கள் நல அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.