பதிவு செய்த நாள்
31
அக்
2022
02:10
சென்னை : சென்னையில் வசிக்கும், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சாத் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், சாத் பூஜை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டியும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய வரங்களை கேட்கவும், இந்த சாத் பூஜையை கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதிகாலை புனித நீராடி, விரதம் இருந்து, தண்ணீரில் நின்று சென்னை மெரினா கடற்கரையில் வழிபாடு செய்தனர்.