சாயல்குடி: சாயல்குடி அருகே எம்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் உள்ள நொண்டி கருப்பண்ணசாமி, அன்பு முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களால் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியும் 108 பால்குட ஊர்வலமும் நடந்தது. மூலவர்களுக்கு பாலாபிஷேகமும் 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.