Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : கார்த்திகை மாத பலன் சிம்மம் : கார்த்திகை மாத பலன் சிம்மம் : கார்த்திகை மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம் : கார்த்திகை மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : கார்த்திகை மாத பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2022
08:11

புனர்பூசம் 4:
பேச்சாற்றலால் எதிலும் வெற்றி கொள்ளும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த நல்ல பலன்கள் வரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள்.  எதிரிகள் விலகிச் செல்வர். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். சூரியன் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும். தொழில்,  வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு குறைவதால் உற்சாகமாக காணப்படுவர். எடுத்த  காரியம் வெற்றி பெறுவதால் மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும்.   பிள்ளைகள் மூலம்  மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர், நண்பர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய  சஞ்சலம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு மற்றவர்களின் பேச்சை நம்புவதா வேண்டாமா என்ற சந்தேகம் ஏற்படும். வாழ்வில் பிடிப்பும் ஆர்வமும்  இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு குழப்பம், பிரச்னைகள் மறையும். வாக்கு கொடுக்கும் முன் சற்று யோசிப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிறன்று நரசிம்மரை வணங்க வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்:நவ. 28, 29
அதிர்ஷ்ட நாள்: டிச. 8, 9

பூசம்:
கொடுத்த வாக்கை காப்பாற்றும் உங்களுக்கு இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சி மேற்கொள்வது குறையும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்து மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சி சாதகமாகும். தொழில், வியாபார விஷயங்களில் எதிர்பாராத  தடை ஏற்பட்டு நீங்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பணியாளர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.  குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபம் மறையும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை  காட்டுவீர்கள். பெண்கள் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. விடாமுயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில  வாக்குவாதம் இருக்கும். அரசியல்வாதிகள்  விடாப்பிடியாக செயல்பட்டு வேலைகளை முடிப்பர். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால்  பிரச்னை வரலாம். மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.
சந்திராஷ்டமம்:நவ. 29, 30
அதிர்ஷ்ட நாள்: டிச. 9, 10

ஆயில்யம்
எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செய்யும் உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு  சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வதால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் மனக்கவலை விலகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை  ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன்  யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். பணியாளர்கள் வீண் அலைச்சலை சந்திக்கலாம். டும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை  ஏற்பட்டு நீங்கும். விருந்தினர் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனப் பயணத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். கலைத்துறையினர் வாக்குவன்மையால் நன்மை காண்பர். அரசியல் துறையினருக்கு சந்தோஷ செய்தி வந்து சேரும். மாணவர்கள் கூடுதல்  கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர கஷ்டங்கள் தீரும்.
சந்திராஷ்டமம்: நவ. 30, டிச. 1
அதிர்ஷ்ட நாள்: டிச. 10, 11

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar