Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : கார்த்திகை மாத பலன் கன்னி : கார்த்திகை மாத பலன் கன்னி : கார்த்திகை மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம் : கார்த்திகை மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : கார்த்திகை மாத பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2022
08:11

மகம்:
ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதன் சஞ்சாரத்தால் புக்தி தெளிவு  உண்டாகும். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த  பண உதவியும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தலை துாக்கலாம். எனவே சாதுரியமாக  பேசி சமாளிப்பது நல்லது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.  வாகன பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு பிரச்னையை எதிர் கொள்ளும்  மனவலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு அரசாங்க அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். அரசியல்வாதிகளுக்கு  பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக  முடியும். சமூக மதிப்பு உயரும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதுாகலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வு நோக்கில் படிப்பது  நல்லது.
பரிகாரம்: முன்னோர் வழிபாடு நன்மையளிக்கும்.  
சந்திராஷ்டமம்: டிச. 2
அதிர்ஷ்ட நாள்: டிச. 11, 12

பூரம்:
வசீகர பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திரநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு  வரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். சனி சஞ்சாரம் உடல் நலம், உற்சாகத்தை தரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். கடன் பிரச்னை குறையும்.  போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கி வசூலாகும். பணியாளர்களுக்கு மறைமுக எதிர்ப்பு நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.  குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த  கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்னை சாதகமான முடிவு பெறும். அரசியல்வாதிகள்  ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது. கலைத்துறையினர்  நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருமானம் வரும். மாணவர்கள்  அதிக நேரம் படிக்க வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: சூரியனை வழிபட்டு வர பிரச்னை குறையும்.
சந்திராஷ்டமம்: டிச. 3
அதிர்ஷ்ட நாள்: டிச. 12, 13

உத்திரம்  1:
முயற்சியால் எதையும் சாதிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின்  பிரச்னைக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். சுபச்செலவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கான பண  உதவியும் கிடைக்கும். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். பணியாளர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.  மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனப்பயணம் நன்மையளிக்கும்.   தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு விரும்பியதை அடையும் சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் பாடங்களில் ஏற்படும்  சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: புதனை வழிபட்டு வர புத்தி சாதுரியம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச.4
அதிர்ஷ்ட நாள்: டிச. 13

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar