கூடலுார்: கூடலுார் தம்மணம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா ஒக்கலிகர் மகாஜன சங்கம் சார்பில் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். முன்னதாக தேவராட்டம்,செண்டா மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்த பெண்களுக்கு சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.