சதுரகிரியில் கார்த்திகை அமாவாசை வழிபாடு; பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2022 08:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இக்கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது நவ. 21 அன்று பிரதோஷம், நவ.23 அன்று கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு நடக்கவுள்ளது. இந்நிலையில் நவம்பர் 21 முதல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும், தற்போது தாணிப்பாறை, வழுக்குப் பாறை, சங்கிலி பாறை ஆகிய ஆற்றுப்பகுதி ஓடைகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதாலும், நவம்பர் 21 முதல் 24 ஆம் தேதி முடிய, அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனத்துறை அறிவித்துள்ளது.