சபரிமலையில் பக்தர்கள் அரிசி கொடுத்தால் சாதம், பாயாசம் இலவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2022 11:11
சபரிமலை : சபரிமலையில் பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி, சர்க்கரையை கவுண்டரில் செலுத்தி வெள்ளைச்சோறு மற்றும் பாயாசம் இலவமாக பெறலாம்.
பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி மற்றும் பொருட்களை ஆங்காங்கு விட்டு செல்கின்றனர். பின் இதை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி குப்பை குடோனுக்கு கொண்டு செல்கின்றனர். இதை பக்தர்கள் தவிர்க்க அரிசிக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தலாம். அல்லது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை 18-ம் படியின் வலது பக்கம் அரவணை கவுண்டருடன் சேர்ந்திருக்கும் சர்க்கரை பாயாச கவுண்டரில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அதற்கு ஈடான சாதம் அல்லது பாயாசம் பெற்றுக் கொள்ளலாம். ரூ.25 கட்டணம் செலுத்தியும் இதை பெறலாம். இதற்காக தனி அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் ஏழு தேவசம் ஊழியர்கள், 52 தற்காலிக பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.