சபரிமலை : சபரிமலையில் ஒரு வேளை அன்னதானம் வழங்க ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
ஐயப்பனை அன்னதான பிரபு என்று அழைக்கின்றனர். காடு மலை கடந்து களைப்பாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் அது புண்ணியம் என பக்தர்கள் கருதுகின்றனர். முன்பு சிறிய அளவில் ஆங்காங்கே பக்தர்கள் பொருட்களை கொண்டு வந்து அன்னதானம் நடத்தி வந்தனர். ஆனால் இது விபத்து உள்ளிட்ட பிரச்னைக்கு காரணமாக இருக்கும் என கருதி கேரள உயர்நீதிமன்றம் தடை செய்தது. இதனால் தேவசம்போர்டு அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் அன்னதானம் வழங்க வசதி செய்தது. ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்க ரூ.6 லட்சம் கட்டணமாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் போது செங்குத்தான ஏற்றத்தில் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால் மருத்துவ உதவி பெற 0473- 520 3232 என்ற எண்ணில் அழைக்கலாம்.