பதிவு செய்த நாள்
25
நவ
2022
02:11
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலில், 6 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
விருத்தாசலத்தில் பழமைவாய்ந்த, விருத்தாம்பிகை, பாலம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இக்கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல், 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அர்த்த ஜாம அடியார் குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்து 129 ரொக்கம், 11 கிராம் தங்கம், 23 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கடைசியாக கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 9 லட்சத்து 2 ஆயிரத்து 888 ரூபாய், 12 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.