தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு உற்சவர் அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். தொடர்ந்து, பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களைப் பாடி ஆராதனை செய்தனர். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.