பதிவு செய்த நாள்
30
நவ
2022
08:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் சேதப்படுத்தப்பட்ட சிற்பம் சீரமைக்கப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இதில், தெற்கு பகுதியில் அமைந்துள்ள, 217 அடி உயர திருமஞ்சன கோபுரத்திற்கு அருகில், ஐந்து நிலைகளுடன், 70 அடி உயரத்தில் அமைந்துள்ள கட்டை கோபுரத்தில், கோவிலினுள் வருவோரை கண்காணிக்க, அந்த கோபுரத்திலுள்ள சிற்பத்தை சேதப்படுத்தி, கோவில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தியது. இதற்கு, பக்தர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வைரலாக்கினர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், இரவோடு இரவாக, அந்த சிற்பத்தை ஸ்தபதிகள் கொண்டு சீரமைத்தனர்.