பதிவு செய்த நாள்
30
நவ
2022
02:11
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயிலில், தனிச் சன்னதியில் சொர்ண வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். இங்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வளர்பிறை பஞ்சமி விழா நடந்தது. அப்போது திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் சொர்ண வராகி அம்மனுக்கு, கோயிலில் உள்ள அம்மி கல்லில் மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்ய வழங்கினர். தொடர்ந்து மஞ்சள், திரவியம், நெல்லி, மா, நாட்டுச் சர்க்கரை, தேன், பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர்.