பதிவு செய்த நாள்
30
நவ
2022
03:11
திருக்கோவிலூர்: பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மகன்யாசருத்ர பாராயணம் நடந்தது.
திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 104 வது ஜெயந்தி விழாவின் முதல் நாள் விழாவான நேற்று காலை 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில் மகன்யாச ருத்ர பாராயணம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம், யோகி ராம் சரத்குமார் மூல மந்திரம், அதிஷ்டானத்தில் சுவாமிக்கு கலசாபிஷேகம், அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகவானுடன் பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலை 4:30 மணிக்கு சத்குருநாதன் ஓதுவார் குழுவினரின் தேவாரம், ஸ்ரீ அஸ்வின் மற்றும் குழுவினரின் பகவான் யோகி ராம் சரத்குமார் லீலைகள் குறித்த நாட்டிய நாடகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் 2ம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் ஏகாதச ருத்ர பாராயண சகிதருத்ர ஹோமம், வசோதாரா பூர்ணாகுதி, அதிஷ்டானத்தில் மகாஅபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரமன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.