முன்பெல்லாம் கடிதம் எழுதும் போதும், இளையவர்களை முதியவர்கள் ஆசிர்வதிக்கும் போதும் சேமமாய் இரு என்பார்கள். சேமம் என்றால் நலம் என்று நாம் பொருள் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த வார்த்தைக்கு இருப்பது போகாமல் இருக்கட்டும் என்று அர்த்தம். இப்போது, நம்மிடம் என்ன வகை சொத்து, சுகமெல்லாம் இருக்கிறதோ, அந்தப் பொருட்கள் நிலைத்துஇருக்கட்டும் என்று அர்த்தம். வித்யாரண்யர் என்ற மகான் இதற்கு இன்னொரு பொருள் சொல்கிறார். ÷க்ஷமம் என்கிற சப்தத்தினால் சொல்லப்படுபவன் நாராயணன். அந்த நாராயணன் உன்னுடன் இருந்து அருளட்டும், என்று அவர் விளக்கமளிக்கிறார்.