பதிவு செய்த நாள்
01
டிச
2022
08:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, வரும் 5- - 8- வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதன் விபரத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபரம் வருமாறு:
* சென்னை, பீச் ஸ்டேஷனில் இருந்து 5-ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், வேலுார் வழியாக, திருவண்ணா மலைக்கு நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடையும்.
மீண்டும் மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, காலை 9:00 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனை சென்றடையும்
* புதுச்சேரியிலிருந்து, 5- மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக, திருவண்ணாமலைக்கு இரவு 10:30 மணிக்கு வந்தடையும். மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, காலை 6:20 மணிக்கு புதுச்சேரியை சென்றடையும்
* மயிலாடுதுறையிலிருந்து, 6- காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக, காலை 10:55 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அன்று பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறை சென்றடையும்
* கடலுார் திருப்பாதிரிபுலியூரிலிருந்து, 6- இரவு 8:50 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக இரவு 10:55 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். பின், வேலுாருக்கு நள்ளிரவு 12:40 மணிக்கு சென்றடையும்
* சென்னை, பீச் ஸ்டேஷனில் இருந்து, 6- மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், வேலுார் வழியாக, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடையும். மறுநாள் அதிகாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 9:00 மணிக்கு சென்னை, பீச் ஸ்டேஷனை அடையும்
*புதுச்சேரியிலிருந்து, 6- மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக, திருவண்ணாமலைக்கு இரவு 10:30 மணிக்கு வந்தடையும். இது, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு, திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6:20 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்
* வேலுாரிலிருந்து, 7 அதிகாலை, 1:30 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 3:00 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அங்கி ருந்து மீண்டும் புறப்பட்டு திருப்பாதிரிபுலியூருக்கு காலை 5:40 மணிக்கு சென்றடையும்.
*மயிலாடுதுறையில் இருந்து, 7- காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக காலை 10:55 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும். அது மீண்டும், அன்று மதியம் 12:40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
*கடலுார் திருப்பாதிரிபுலியூரிலிருந்து, 7 இரவு 8:50 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக இரவு 10:55 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அங்கிருந்து வேலுாருக்கு நள்ளிரவு 12:40 மணிக்கு சென்றடையும்
* சென்னை, பீச் ஸ்டேஷனில் இருந்து, 7- மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், வேலுார் வழியாக, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடையும்.அது மீண்டும், 8- அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, காலை 9:00 மணிக்கு சென்னை, பீச் ஸ்டேஷனை அடையும்
* புதுச்சேரியில் இருந்து, 7- மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக, திருவண்ணாமலைக்கு இரவு 10:30 மணிக்கு வந்தடையும். மீண்டும் இந்த ரயில், 7- அதிகாலை 3:30 மணிக்கு, திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, காலை 6:20 மணிக்கு புதுச்சேரியை
சென்றடையும்
* வேலுாரிலிருந்து, 8- அதிகாலை 1:30 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 3:00 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மீண்டும், அங்கிருந்து புறப்பட்டு, திருபாதிரிப்புலியூரை காலை 5:40 மணிக்கு சென்றடையும்.