மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 12:12
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்துச் சென்றனர்.
அவிநாசிலிங்கம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா வரும் 4ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர் .மேலும் இன்று முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமத்துடன் வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், பூர்ணாகுதி, திரவியாகுதி மற்றும் மூலாலய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன சாந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றது. இதனையடுத்து நாளை காலை இரண்டாம் கால யாக பூஜையில்,வேதிகார்ச்சனை, நாடி சந்தனம், மகாதீபாரதனை நடைபெற்று மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.