பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணா கோவிலில் ஏகாதசி விழாவையொட்டி குருவாயூர் கேசவன் என்ற யானையின் உருவச் சிலை முன்பாக கோவில் தேவஸ்தானத்தின் 15 யானைகள் நினைவஞ்சலி நேற்று செலுத்தின.
கடந்த 1976ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி திருவிழா நாளில் அதிகாலை கேசவன் என்கிற யானை நோய் வாய்ப்பட்டு உயரிழந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவனின் உருவச்சிலை முன்பாக கோவில் யானைகள் அனைத்தும் பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவனின் படத்துடன் வீதி உலா வந்து நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். நடப்பாண்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதைத் தொடர்ந்து யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவில் மலர் ஆகியவை வழங்கப்பட்டன. 40 ஆண்டு பழமை வாய்ந்த கேசவனின் உருவச்சிலை கேடுபாடுகளைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடத்தி புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேசவன் யானையின் நினைவூட்டும் வகையில் கேசவன் உருவச் சிலை முன்பக்கம் உள்ள சுற்றுச் சுவரில் 50 அடி நீளத்திலும் நான்கு அடி உயரத்திலும் புதிதாக வரைக்கப்பட்ட ஓவியம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தனர்.
அதே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து புன்னத்தூர்கோட்டை யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றுகொண்டிருந்த தாமோதர்தாஸ் என்ற யானை கோவில் அருகே வைத்து திடீரென மிரண்டது பக்தர்களே பீதியடையச் செய்தனர். பாகன்மார்கள் முறையாக செயல்பட்டு சங்கிலியால் கட்டிப் போட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தப்பின. இந்த யானை ஒரு வாரம் முன்பும் கோவில் வளாகத்தில் வைத்து மிரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின் பல கோவில் திருவிழா அணிவதுப்பில் கலந்து கொண்டுள்ளனர். யானைக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று பாகன்மார்கள் தெரிவித்தனர். குருவாயூர் ஏகாதசி இன்று, நாளையும் வெகு விமர்சையாக நடக்க உள்ளது. இரு தினங்களில் விழா கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். சனிக்கிழமை பிதுருபக்ஷ ஏதாசியும் ஞாயிற்றுக்கிழமை தேவபக்ஷ என்ற ஆனந்தபக்ஷ ஏதாசியும் உள்ளதால் ஆகும் இரு தினங்களில் விழா கொண்டாடபடுகின்றன. இவ்விரு தினங்களிலும் கோவில் நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு வரிசையும், முதியோருக்கு சிறப்பு வரிசையில் ஏற்பாடு செய்துள்ளனர். ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை வயிறு வகை பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. ஸ்ரீ குருவாயூர் திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக மேற்பத்து கலையரங்கில் 15 நாட்களாக நடந்து வந்த, செந்தில் சங்கீத உற்சவம் நேற்று பிரபல இசை கலைஞர் டிவி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான கலைஞர்களின் பஞ்சரத்னகீர்த்தனையுடன் நிறைவுபெற்றது.