சீராகுமா சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 05:12
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர், குப்பை கலப்பதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு காது குத்தி, முடி காணிக்கை செய்து விட்டு குளத்தில் நீராடுவது வழக்கம். சமீபகாலமாக குளத்தில் கழிவு நீர் கலப்பதால் பயணிகள் குளிப்பதற்காக அருகில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் தெப்பக்குள நீரில் நீராடுவதை சிலர் புனிதமாக கருதுகின்றனர். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்புச்சுவர் சில இடங்களில் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. அருகே செல்லும் கால்வாயில் ஓடும் கழிவுநீர் சில நேரங்களில் தெப்பக்குளத்தில் கலந்து விடுகிறது. பக்தர்கள் விட்டு செல்லும் குப்பைகள் அகற்றப்படாமல் தெப்பக்குளம் சுகாதார சீர்கேட்டுடன் இருக்கிறது. எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.