இயற்கைக்கு நன்றி தெரிவித்து துளசிக்கும் நெல்லிக்கும் திருமணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2022 10:12
புவனகிரி: புவனகிரி ஆர்ய வைஸ்ய மஹிளா கிளப், ஆர்யவைஸ்ய இளைஞர் நற்பணி மற்றும் ஸ்ரீவாசவி கிளப் சார்பில் உலக நன்மை வேண்டியும், இயற்கைக்கு நன்றி தெரிவித்து நெல்லிக்கும், துளசிக்கும் திருமணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புவனகிரி ஆர்ய வைஸ்யாள் சமுகத்தினர் இயற்கைக்கு நன்றி தெரிவித்து, நெல்லி செடியை சிவனாகவும், துளசியை பெருமாளாகவும், கருதி திருமணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நாளில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் தீபத்திற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நெற்று ஸ்ரீபாண்டு ரங்கர் பஜனை மடத்தில் நடந்தது.காலை 8.00 மணிக்கு ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்தனர். காலை 8.15 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாஹவஜனமும், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், கலசபூஜைகள், கணபதிஹோமம், புருஷூக்த ஹோமம், ஸ்ரீ ஸூக்த ஹோமம் நடந்தது. காலை 10.45 மணிக்கு பூர்ணாஹூதியைத்தொடர்ந்து மாங்கல்ய தாரணமும் காலை 11.30 மணிக்கு மஹா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து வனபோஜனம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீதர்பாலாஜி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.