கோட்டூர் பழங்குடி மக்கள் தங்கள் மரபுப்படி சபரிமலையில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2022 01:12
திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தவறாமல் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் நேற்று சபரிமலை சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை தரிசிக்க மட்டுமே காட்டிலிருந்து செல்கின்றனர். மற்ற எந்த காரியத்திற்காகவும் காட்டை விட்டு வெளியே வருவதில்லை கோவிட் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபரிமலைப் பயணம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. இம்முறை 20 பேர் கொண்ட குழுவினர் தரிசனம் செய்தனர். மரபுப்படி, மூங்கில் குச்சிகளில் நிரம்பிய காட்டுத் தேன், காட்டில் விளையும் கதலிக்குழம்பு, கரும்பு, காட்டு குந்திரிக், பூக்கூடை, மூங்கில், கரும்பு, நாணல் ஆகியவற்றால் விரத தூய்மையுடன் நெய்யப்பட்ட பெட்டிகளுடன் கனி குழுவினர் வந்து சன்னிதானத்தில் காணிக்கையாக செலுத்தினர். திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோட்டூர் முண்டானி மாடன் தம்புரான் கோயிலில் இருந்து புறப்பட்ட குழுவினர், கொட்டாரக்கரை கணபதி கோயில், பந்தளம் அரண்மனை ஆகிய இடங்களில் தரிசனம் செய்துவிட்டு இரவு சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.