சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு : மகர விளக்கு பூஜைக்கு 30ல் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2022 05:12
சபரிமலை: சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மண்டல பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம்தேதி திறக்கப்பட்டது. தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று மதியம் நடை பெற்றது. அய்யப்ப சுவாமிக்கு 450 பவுன் தங்க அங்கி அணிவிக்கப்ப ட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடத்தப்பட்டது. அனைத்து பூஜைகளையும் தந்திரி கண்டரரு ராஜீவரர்தலைமையில் நடை பெற்றது. களப கலசஎழுந்தருளல் மற்றும் சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு வாழை இலையில் விருந்து வழங்கப்பட்டது. நேற்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனத்துடன் திருநடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைகாக சபரிமலை கோவில் திருநடை மீண்டும் வரும் 30ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இன்றும், நாளையும் பக்தர்கள் பம்பையில் இருந்து மலை ஏறிச்செல்ல அனுமதி இல்லை . ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடை பெறுகிறது. பின்னர் ஜனவரி 20ம் தேதி நடை அடை க்கபடுகிறது.