சபரிமலையில் மண்டல காலம் நிறைவு: மகரஜோதிக்காக டிச.30 நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2022 09:12
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் மண்டலபூஜையுடன் நிறைவு பெற்றது. மகரஜோதி விழாவுக்காக டிச.,30 -தேதி மாலை நடை திறக்கப்படும்.
நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலகாலம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு சில நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. 41 நாட்கள் நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக மண்டலபூஜை நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சந்தனம் பூஜித்து தங்க குடத்தில் நிறைத்து அதை பவனியாக எடுத்து வந்து ஐயப்பனுக்கு அபிேஷகம் செய்தார். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி, நடை அடைக்கப்பட்டது. இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. 31-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின்னர் 3:30 மணிக்கு நெய் அபிேஷகம் தொடங்கும். ஜன.,14-ல் மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது.