ஸ்வார்த்தம் சத் சங்கத்தில் குரு ஜெயந்தி விழா: நாளை பதஞ்ஜலி மகரிஷிக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2022 10:12
மதுரை : மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மகரிஷிக்கு சகல அபிஷேக ஆராதனைகளும் ஜோதி தரிசனமும், அன்னதானமும் நடைபெறுகிறது.
யோக ஆச்சாரியார் குருஜி டி எஸ் கிருஷ்ணன் இறைவன் திருவடியில் ஜீவன் முக்தி அடைந்த நாளான மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் மூன்றாவது ஆண்டு குரு ஜெயந்தி விழாவானது நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (30-12-2022) மாலை 6.30 மணியளவில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மகரிஷிக்கு சகல அபிஷேக ஆராதனைகளும் ஜோதி தரிசனமும், அன்னதானமும் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு சனிக்கிழமை (31-12-2022) அன்று காலை 9.30 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமம் பதஞ்ஜலிபுரத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ அகிலாண்ட வல்லி மேத ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில் மற்றும் அருள் சித்தர் இராமதேவர் பீடத்தில் குரு பூஜை வழிபாடும் அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் குரு பூஜை நிகழ்ச்சிகளில் சத்குருவின் சீடர்கள் மெய்யன்பர்கள் பக்தகோடிகள் அனைவரும் குரு பூஜையில் கலந்து கொள்ளலாம் என ஸ்வார்த்தம் சத் சங்கம் மற்றும் அருள் சித்தர் இராமதேவர் ஆன்ம பீடத்தினர் தெரிவித்தனர்.