Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023 கன்னி : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023 கன்னி : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
சிம்மம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023
எழுத்தின் அளவு:
சிம்மம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023

பதிவு செய்த நாள்

29 டிச
2022
05:12

மகம்
முயற்சியால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த ஆண்டில் உங்களின் முகம் பொலிவு பெறும்.  மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதை துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள்.  வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கைக்கு வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வழக்குகளில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பால் வருமானம் பெருகும். தடைபட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.  

அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதே நேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதுாறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்களுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் நிதானமுடன் பேசுவது நல்லது.  

மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட நிம்மதி பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 9

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீஷண்முகாய நம: என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.


பூரம்
பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். சிலருக்கு ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண்சிமிட்டுகின்றன. அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மது, போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய ஆண்டு இது. சனி பகவான்  உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மையைத் தோற்றுவிப்பார். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
பணியாளர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சகஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருத மாட்டீர்கள். பண வரவில் தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலைத்திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்வது நல்லது. வியாபாரத்தால் உங்கள் கவுரவமும், அந்தஸ்தும் உயரும்.

அரசியல்துறையினரைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களில் ஈடுபடுவர். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித்தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். வீண் விவாதங்கள், சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான்  வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்கள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். அறிமுகம் இல்லாத எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

மாணவர்கள் கடினமாக உழைப்பின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவர்.  தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பது அவசியம். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை புரிவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
பரிகாரம்: ஆண்டாள் வழிபாடு துன்பம் போக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.


உத்திரம் - 1: கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானம் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடு மூலம் திடீர் பணவரவு உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற கூடுதல் பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் மிடுக்கு உண்டாகும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்கு அதிகமாக செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாற வாய்ப்புண்டு. உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடப்பார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

பணியாளர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறுவது அவசியம். உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் நன்மை ஏற்படும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ப புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று பாராட்டு காண்பர். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோரின் அறிவுரையை பின்பற்றி மேலும் சிறப்படையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: புதனன்று கருடாழ்வாரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar