பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
அவிட்டம் 3, 4
நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய உங்களுக்கு இந்த ஆண்டில் எதிலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரவு சீராக இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தாமதமான போக்கு காணப்பட்டாலும் முடிவில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். மற்றவர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும். சுபவிஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். நல்லவர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். மாமன், மைத்துனர் வகையில் செலவு செய்ய நேரிடும். சமூக அக்கறையுடன் சிலர் பொதுப்பணிகளில் ஈடுபடுவர்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். உறவினர், நண்பர்களின் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மூலம் பெருமை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் ஆர்வம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
பணியாளர்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சலையும், சக்திக்கு மீறிய உழைப்பையும் தவிர்க்க முடியாது. சாதுர்யமான பேச்சின் மூலம் சிலர் வளர்ச்சி காண்பார்கள். எதிர்பார்த்தபடி சிலருக்கு பதவி, சம்பளம் உயரும். சிலர் மற்றவர்களின் பணிகளையும் கூடுதலாக கவனிக்க வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். கையில் பணபுழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும்.
அரசியல்வாதிகளுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் தொண்டர்களின் ஆதரவு, எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்ல வாய்ப்புண்டு.
மாணவர்கள் கவனமாக படிப்பது அவசியம். அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண்பொழுதுபோக்கு, அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமையன்று முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள்.
சதயம்
சிக்கனத்தை கடைபிடிக்கும் உங்களுக்கு இந்த ஆண்டில் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், உதவியும் கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு கனவுத் தொல்லைகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான சூழல் நிலவும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான பணிகள் மனநிறைவை தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு, தகராறுகள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்குவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். மறைமுகப் போட்டிகள் குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கடந்த காலத்தில் இருந்து வந்த கடன் பிரச்னை தீரும்.
வெளியூர்களுக்கு அடிக்கடி அலைய வேண்டி இருந்தாலும் அதன் பயனாக ஆதாயம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த எதிர்பார்த்த கடன்வசதி, வங்கி நிதியுதவி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நிர்வாக திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பணி விஷயமாக அலைச்சல் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். சில நேரத்தில் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுக்கு ஆளாகலாம்.
பெண்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை, தீமைகளை பற்றி கவலைப்படாமல் மனம் போல போக்கில் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் விமர்சனங்களால் கோபத்திற்கு ஆளாவீர்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் அடைவர். சக கலைஞர்களின் கருத்துக்களை ஏற்க முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பரிசு, பாராட்டு தாமதமாக கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு திருப்தியளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் பிறக்கும். வருமானம் திருப்தி தரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொண்டர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துவர். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை மறையும். கவனத்தை சிதற விடாமல் பாடத்தைக் கவனிப்பது அவசியம். படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்கையை வழிபடுவது முன்னேற்றம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீதுர்கை போற்றி, துர்கா சகஸ்ர நாமம் சொல்வது நன்மை தரும்.
பூரட்டாதி - 1, 2, 3
பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடையும் உங்களுக்கு இந்த ஆண்டில் எதிர்ப்புகள் நீங்கும். மறைமுகப் பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்னைகள் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாழ்வில் எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராடத் தயங்காதவர். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். சுபவிஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். அவ்வப்போது ஆடம்பர எண்ணம், வீண்செலவு, உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.
குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். ஒருவருக்கொருவர் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளை தவிர்க்க முடியாது. பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் வழியில் செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீண்டதுார பயணங்களை தவிர்க்க முடியாது. அந்த பயணங்களால் ஆதாயம் காண்பீர்கள். சக பணியாளர்கள் மூலம் உதவி கிடைக்க பெறுவீர்கள். வழக்கத்திற்கு மாறான பணிச்சுமையால் சிலர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
பெண்களுக்கு வளர்ச்சிக்கான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். பிரச்னைக்கு தீர்வு அல்லது ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
கலைத்துறையினர் கோபத்தை குறைத்து அவசியம். அனைவரிடமும் நிதானமாக பேசுவது பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் அதற்கேற்ப ஊதியம் கிடைக்கும். குடும்பத்தினரின் கருத்தை மதிப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கடந்த கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி காண்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும், உதவியும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை விளக்கேற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
சொல்ல வேண்டிய மந்திரம்: சிவாயநம என்று தினமும் 108 முறை சொல்லுங்கள்.