பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
உத்திராடம் - 2, 3, 4
எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் உங்களுக்கு இந்த ஆண்டில் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்
பரிகாரம் : திங்கட்கிழமையில் சந்திரபகவானை வழிபடுங்கள். ஒருமுறை திங்களூர் சென்று தரிசனம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 108 முறை ‘ராம நாமத்தைச் சொல்லுங்கள். சுந்தரகாண்டம் படிப்பது விசேஷம்.
திருவோணம்
அதிகாரமும் தோரணையும் மிக்க உங்களுக்கு இந்த ஆண்டில் தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் காண்பீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். கடந்த கால பிரச்னைகள், துன்பங்கள் விலகும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் கூடும். நிலுவையில் இருந்த பாக்கி தொகை வசூலாகும்.
பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்ற ஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பணிமாற்றம், இடமாற்றம் போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அவ்வப்போது பணிச்சுமையால் மனக்கவலை, டென்ஷன் அடைய வாய்ப்புண்டு. பணிவிஷயமாக வெளியூர்ப்பயணம் செல்ல நேரிடலாம்.
பெண்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து முடியும். எந்த ஒரு புதிய வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் புதிய பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி சிலர் நற்பெயர் வாங்க முயற்சிப்பர். தொண்டர்களால் அனுகூலம் கிடைக்கும் காலம். அவர்களால் காரியவெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் லாவகமாக எதிர்கொள்வீர்கள். நல்ல நபர்களிடம் உங்கள் திறமைகளை எடுத்துச் சொல்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு, தனியார் மூலம் விருது, பாராட்டு, பரிசுகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்துவர். தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற்று மகிழ்வர்.
பரிகாரம் : திங்களன்று சிவபெருமான் கோயிலுக்கு செல்லுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
சொல்ல வேண்டிய மந்திரம்: நமச்சிவாய என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள்.
அவிட்டம் - 1, 2
எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் உங்களுக்கு இந்த ஆண்டில் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் நல்லவர்களின் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி விலகும். நண்பர்களால் நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் விரைவில் முடியும். புதிய நண்பர்களின் அறிமுகத்தல் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தினர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுக்காக ஆடம்பரச் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். அவ்வப்போது உறவினர்கள் வருகையால் மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.
தொழில் வியாபாரம் சீரான முறையில் நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியான நீண்டதுார பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பணியாளர்கள் மற்றவர்களுக்காக கூடுதல் பணிச்சுமை, பொறுப்புகள் ஏற்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம். அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். விண்ணப்பித்த கடனுதவி, எதிர்பார்த்த பணிமாற்றம், இடமாற்றம் சரியான சமயத்தில் கிடைக்கும்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாக நடந்து கொள்வார்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களின் தலையீடு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் சீரான முன்னேற்றம் காண்பர். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது அவசியம். ஆசிரியர்கள் வழிகாட்டுதலும், சக மாணவர்களின் ஆதரவும் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
பரிகாரம் : வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 6
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்கந்தகுரு கவசத்தை வியாழன்று படிப்பது நல்லது.