வடமதுரை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (ஜன.2) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக அதிகாலை 4:00 மணி துவங்கி திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்து காலை 7:00 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
* எரியோடு குரும்பபட்டி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் நாளை அதிகாலை 4.30 மணி துவங்கி அலங்காரம், திருமஞ்சனம் நடக்கிறது. அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.
* மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தி இன்னிசையும், தொடர்ந்து மதியம் 1:45 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், பிரசாதம் வழங்கப்படுகிறது.