புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 07:01
புதுச்சேரி காந்திவீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்ப்டது.
புதுச்சேரி காந்திவீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (ஜனவரி 02) அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்ப்டது. வைகுண்ட
ஏகாதசி முன்னிட்டு அதி காலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு
எம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து வழிபட்டனர்.