திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 08:01
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெற்று வருகிறது. விழாவானது கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கியது. தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்கள் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறம் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வைகுண்டவாசனை வழிபட்டனர்.