திருப்பூர் : திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபதவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது. பரமபதவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் பெருமாள் காட்சியளித்தார். பின்னர் வைகுண்ட நாதர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.