சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 11:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று(ஜன.,05) கோலாகலமாக நடந்தது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனியில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்தி வீதியுலா நடந்து வந்தது. ஜனவரி 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், .4-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடந்தது. அதனையடுத்து முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று(ஜன.,05) நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.